மனிதர்களா இவர்கள்..? மதுப்பாட்டில் லாரி விபத்து..! குடிமகன்களின் கேவலமான செயல்..!

417

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மதுபான கடைகளுக்கு மதுபானங்களை விநியோகம் செய்ய அனுப்பப்பட்ட லாரி, விட்டல் நாயக்கம்பட்டி அருகே டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் ஓட்டுநர் உள்பட இருவர் காயமடைந்த நிலையில், விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்பதற்கு பதிலாக லாரியில் இருந்து, சாலையில் விழுந்த மதுபானங்களை குடிமகன்கள் அள்ளிச்ச சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே, தகவலறிந்து வந்த போலீசார் விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே, சமூக பரவலை மறந்து மதுபாட்டில்களை அள்ள மதுபிரியர்கள் கூட்டம் கூடியதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of