வேலியே பயிரை மேய்வது இதுதானோ..? – லாரியில் பேட்டரியை திருடும் சப்-இன்ஸ்பெக்டர்..!

873

செங்கல்பட்டு அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லாரியில் இருந்து பேட்டரி மற்றும் டீசல் திருடும் காட்சிகள் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மணல் திருட்டு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி ஒன்று, திருக்கழுக்குன்றம் காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், Friends of police இளைஞர் ஒருவர் உதவியோடு, அந்த லாரியில் உள்ள பேட்டரி மற்றும் டீசலை, திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் திருடி காரில் எடுத்துச் சென்றுள்ளார்.

தற்போது இதற்கான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதையடுத்து, பேட்டரி மற்றும் டீசல் திருட்டில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனை, ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி கண்ணன் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் இந்த செயல், பொதுமக்கள் மத்தியில் முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement