லாரியை தீ விபத்திலிருந்து மீட்ட ’விஜயகாந்த்’

474

விழுப்புரம் மாவட்டம்   வையபாளையம் கிராமத்தில் வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரி எதிர்பாராத விதமாக மின்கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்தது.

இதையறிந்த ஓட்டுநர் விஜயகாந்த், உடனே லாரியை பள்ளத்தில் செலுத்தி தீப்பிடித்த வைக்கோலை கீழே விழ வைத்தார்.

ஆனால்  தீ முழுமையாக அணையாததால் திறம்பட செயல்பட்ட ஓட்டுநர் அந்த லாரியை அருகிலிருந்த குளத்திற்கு ஓட்டிச் சென்றார்.

பின்னர் தீப்பற்றி எரியும் லாரியை தண்ணீர் நிறைந்த குளத்தில் இறக்கி தீயை அணைத்தார்.

பரபரப்பான சூழ்நிலையில் உயிரையும் துச்சமென மதித்து திறமையுடன் செயல்பட்ட லாரி ஓட்டுநர் விஜயகாந்தின்  சாமர்த்தியத்தால் லாரி தீ விபத்திலிருந்து தப்பியது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of