“பெற்றோர்களின் சம்மதம்”- காதல் திருமணம் பற்றி போட்டுடைத்த லாஸ்லியா..!

1240

பிக்பாஸ் சீசனில் ஆரம்பத்திலேயே அதிக ரசிகர்களைப் பெற்றவர் லாஸ்லியா. இலங்கை செய்தி வாசிப்பாளரான இவரது நடனம், கொஞ்சல் பேச்சு போன்றவை மக்களை அதிகம் கவர்ந்தது.

ஆனால் இடையில் கவினுடனான காதலால் அவரது கவனம் நிகழ்ச்சியில் இருந்து கொஞ்சம் சிதறியது.

பின்னர் அவரது தந்தையின் வருகை, கவினின் வெளியேற்றம் போன்ற காரணங்களால் பைனல்ஸ் வரை வந்த லாஸ்லியாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்தது.

 

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது, தனது திருமணம் குறித்து லாஸ்லியா கூறிய விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த லாஸ்லியா, “இலங்கையைச் சேர்ந்த நான் புதுமுகமாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தபோதும் கூட தமிழக மக்கள் கொடுத்த ஆதரவால் இந்த இடம் கிடைத்திருக்கிறது.நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருக்கிறேன்.

எனது அப்பா மிகவும் பாசமானவர். என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித் தான் காதலித்தோம் எனச் சொல்லி சொல்லி தான் எங்களை வளர்த்தார்கள். ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம்.

என்னுடைய பெற்றோர்கள் நாங்கள் சொல்வதைத் தான் கேட்பார்கள். நான் உண்மையாக இருந்திருக்கிறேன் என்று எனது பெற்றோர்களுக்குத் தெரியும்” எனக் கூறியிருக்கிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of