குளம் குட்டைகளில் கூட தாமரை மலரும்…ஆனால் தமிழ் நிலத்தில் ஒருபோதும் மலராது.. – திருமாவளவன்

941

குளம் குட்டைகளில் கூட தாமரை மலரும் ஆனால் தமிழ் நிலத்தில் ஒருபோதும் தாமரை மலராது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் மக்களவை தொகுதியில் வெற்றி பெற்ற பிறகு மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்;

தமிழகத்தில் எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டதை போல மற்ற மாநிலங்களிலும் திரண்டிருந்தால் மத்தியில் மதவெறி அரசு அமைந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

தமிழகம் பெரியார் மண். இங்கு சாதிவெறி,மதவெறி சக்திகளுக்கு இடமில்லை என்பதை தமிழக மக்கள் உணர்த்தியுள்ளனர் என கூறிய அவர் குளம் குட்டைகளில் வேண்டுமானால் தாமரை மலரும், ஆனால் தமிழக மண்ணில் தாமரை ஒருபோதும் மலராது என தெரிவித்தார்.

Advertisement