காதல் திருமணம் செய்த ஜோடி! சவுக்கடி கொடுத்த கொடூர கிராமம்!

575

மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள குந்த் என்ற மலை வாழ் கிராமத்தை சேர்ந்த 22 வயது வாலிபரும், 20 வயது பெண்ணும் காதலித்தனர். இதற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் வீட்டை விட்டு வெளியேறி 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

இதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் 2 பேரையும் தேடி கண்டு பிடித்து குந்த் கிராமத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு ஊர் நடுவில் இருவரையும் கம்பத்தில் கட்டி வைத்தனர்.

கிராம மக்கள் மத்தியில் இருவரையும் சவுக்கால் அடித்து சித்ரவதை செய்தனர். காதல் திருமணம் செய்த பெண்ணின் தலை முடியை இழுத்து துன்புறுத்தினர். குச்சியாலும் அடித்தனர்.

இந்த கொடுமை 2 மணி நேரம் நடந்தது. அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கிராம மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் செல்போனில் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

இதற்கிடையே மலைவாழ் கிராம தலைவர்களும், இளம்பெண்ணின் குடும்பத்தினரும் சமாதான முடிவுக்கு வந்தனர். அதன்படி இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபரின் குடும்பம் ரூ.90 ஆயிரத்துக்கு 2 ஆடுகளை விற்று அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இத்தகவல் போலீசாருக்கு தெரிய வந்தது. உடனே அவர்கள் குந்த் கிராமத்துக்கு விரைந்து வந்தனர். இளம் ஜோடியை கட்டி வைத்து சவுக்கால் அடித்த 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of