காதலிக்கப் போறீங்களா..? – இதை படிங்க

708
Love

காதல் மயக்கத்தில் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை சொர்க்கமாகும் என்று நினைக்கும் பெண்களின் கனவுலகத்தைத் திருமணம் பயங்கரமாக உடைத்து நொறுக்கிவிடுகிறது என்பதை முன்கூட்டியே அவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் உறக்கத்தை கலைத்து, யதார்த்தத்தை உணர்ந்து, நனவுலகில் நடமாடவேண்டும்.

தன்னுடைய ஆண் நண்பர், தன்னுடைய உடலைத் தொட முன் வருவதாய் இருந்தால், அதனை உடனே தடுத்து நிறுத்துவதில் பெண் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும். ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்று  பெண் எளிதில் பேசி விடலாம். இது அவர்களின் அறியாமையைக் காட்டுகிறது. அதே நேரத்தில், இந்தப் பேச்சு ஆணவத்தை உண்டாக்கிவிடுகிறது. இது அவரவர்களின் அழிவிற்கே வழிவகுத்து விடுகிறது.

இன்றைய உலகில், பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சொகுசான வாழ்க்கையோடு ஓட்டல், கேளிக்கைவிடுதி என பணத்தை வீணடிப்பதுடன், அந்நிய கலாச்சார மோகத்தில் மூழ்கி, சமூதாயத்தில் தங்களது பெயரையும் கெடுத்துக்கொள்கிறார்கள். இது போன்ற கண்மூடித்தனமான செயல்களில் செல்லாமல், காதல் மோகப் படுகுழியில் விழாமல், பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் அன்பு, சமாதானம், நீடிய பொறுமை, தயவு, சாந்தம், இச்சை அடக்கம் இருந்தால் திருமண வாழ்க்கையில் வெற்றி காணலாம். இப்படி வாழ்வது ஒரு போதும் எந்த ஒரு பெண்ணையும் அடிமையாக்கி விடாது. மாறாக, இது போன்ற நெறிகளைக் கொண்ட வாழ்வு  பெண்களுக்குத் தங்களது கடமைகளை உணர்த்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்குக் குடும்ப வாழ்விலும், தாங்கள் செய்யும் எந்த ஒரு பணியிலும் மேலான ஒரு நிலையை நல்குகிறது.

திருமணத்திற்கு முன்பு கட்டுப்பாட்டோடும், சரியான மனநிலையோடும் நடந்துகொள்ளும் பெண்ணின் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைகிறது. அவ்வாறு, கட்டுப்பாட்டோடும், சரியான மன நிலையோடும் வாழாத பெண்ணின் வாழ்க்கை கேள்விக்குறியாக அமைகிறது.

– ஜாய் ஐசக்

(இனியவளே உனக்காக)

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of