சந்தேகத்தால் தற்கொலை செய்து கொண்ட காதலர்கள்

1201

தஞ்சை: தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் விக்னேஷ் என்பவர் பி.காம் 2-ம் ஆண்டு படித்துவந்தார். அதே கல்லூரியில் படித்துவந்த ஜெயஸ்ரீயை 2 வருடங்களாக காதலித்து வந்தார். இதற்கிடையில் கடந்த மாதம் கல்லூரியில் விக்னேஷ் தனது காதலியின் செல்போனை வாங்கி பார்த்தபோது சில எண்களில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

அதை பார்த்த விக்னேஷ், இந்த எண்கள் யாருடையது என்று கேட்டார். இதனால் கோபமடைந்த ஜெயஸ்ரீ, என்னை சந்தேகப்படுகிறாயா என்று விக்னேஷுடன் சண்டை போட்டார். நீண்ட நேர வாக்குவாதத்திற்குப்பிறகு விக்னேஷ், தனது காதலியுடன் மோட்டார் சைக்கிளில் கல்லணை கால்வாய்க்கு சென்றுகொண்டுருந்த போது மீண்டும் அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஆத்திரமடைந்த ஜெயஸ்ரீ கல்லணை கால்வாயில் குதித்தார்.

இதை சற்றும் எதிர்பாராத விக்னேஷ் ஜெயஸ்ரீயை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் விக்னேஷ் மட்டும் காப்பாற்றப்பட்டார் ஜெயஸ்ரீயை கண்டுபிடிக்க முடியவில்லை. 2 நாட்கள் கழித்து ஜெயஸ்ரீயின் உடல் துறையூர் பாலம் அருகே மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து தஞ்சை தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். காதலி இறந்ததால் தானும் தற்கொலை செய்ய முடிவு செய்து விஷம் குடித்த விக்னேஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விக்னேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement