ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி

468

விருதுநகர் அருகேயுள்ள வில்லிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

அதே கல்லூரியில் விருதுநகர் ரோசல்பட்டியை சேர்ந்த ரஞ்சிதாவும் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
ஆனால் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவருடைய வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் காதல் ஜோடி தற்கொலை செய்ய முடிவு செயதனர். நேற்று மாலை விருதுநகர்-சாத்தூர் ரெயில்பாதை பகுதிக்கு சென்றுள்ளனர். அந்த வழியாக வந்த ரெயில்முன் இருவரும் பாய்ந்துள்ளனர்.

இதில் இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று 2 பேரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரயில்வே போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Advertisement