அதிகமாக சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காம இருக்கனுமா.? க்ளிக் பண்ணுங்க!

971

உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், எடையை குறைப்பதற்காக உணவுப்பொருட்களை குறைவாக உண்ணுவதற்கு முயற்சி செய்வார்கள். இதனால் அவர்களின் உடல் எடை குறையுமா என்றால், அது நிச்சயமாக இல்லை.

ஏனென்றால், நம் உடல் எடை உயர்வதற்கும், நாம் உண்ணும் உணவு பொருட்களின் அளவிற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை. நம் உடல் எடை உயர்வது, உணவுப்பொருட்களில் இருக்கும் கலோரிகளின் அளவைப்பொறுத்துள்ளது.

ஒரு சில பேர் உடல் எடையை குறைப்பதற்காக, டயட் இருப்பதாக கூறிக்கொண்டு, உணவுகள் சாப்பிடுவதை குறைத்து, அதை குறிப்பிட்ட நாளுக்கு முயற்சி செய்வார்கள். பின்னர் அவர்களால், உணவு சாப்பிடாமல் இருக்க முடியாமல், மீண்டும் பழைய படி உணவு பொருட்களை சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள்.

சரியான விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கிய காரணம் ஆகும். கலோரிகள் குறைவாக உள்ள உணவுப்பொருட்களை அதிகமாக உண்டாலும், உடல் எடை அதிகரிக்காது, ஆனால் கலோரிகள் அதிகமாக இருக்கும் உணவு பொருட்களை குறைவாக உண்டால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.

கலோரிகள் குறைவாக இருக்கும் உணவுப்பொருட்களை அதிகப்படியாக உண்ணும்போது, நமக்கு அதிகப்படியாக சாப்பிட்ட மனஉணர்வும் இருக்கும், உடல் எடையும் அதிகரிக்காது. தற்போது கலோரிகள் குறைவாக உள்ள உணவுப்பொருட்கள் குறித்து பார்க்கலாம்..,

காலி பிளவர் – 100 கிராமில் 25 கலோரிகள்

பீட்ரூட் – 100 கிராமில் 43 கலோரிகள்

பூசனிக்காய் – 100 கிராமில் 26 கலோரிகள்

ஸ்ட்ராபெரி – 100 கிராமில் 33 கலோரிகள்

ஆப்பிள் – 100 கிராமில் 52 கலோரிகள்

முட்டையின் வெள்ளைக்கரு – 100 கிராமில் 52 கலோரிகள்

வெள்ளரிக்காய் -100 கிராமில் 15 கலோரிகள்

தக்காளி – 100 கிராமில் 17 கலோரிகள்

ஆரஞ்சுப்பழம் – 100 கிராமில் 47 கலோரிகள்

இதுபோன்று கலோரிகள் குறைவாக உள்ள பொருட்களை அதிகமாக சாப்பிட்டாலும், உடல் பருமன் அதிகரிக்காது என்று உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் கூறி வருகின்றனர். ஒரு சாதாரண ஆணிற்கு, ஒரு நாளைக்கு 2,500 கலோரிகளும், பெண்ணிற்கு 2000 கலோரிகளும் வரை தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of