திட்டமிட்டப்படி நாளை வேலைநிறுத்தப் போராட்டம் – எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள்

462

திட்டமிட்டப்படி நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட, மாநில அளவிலான புதிய டெண்டர் முறையில், 4 ஆயிரத்து 800 லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கியதாக கூறப்படுகிறது.

லாரி உரிமையாளர்கள் 5 ஆயிரத்து 500 லாரிகளுக்கு ஒப்பந்தம் கோரிய நிலையில், 700 லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இதனால் விடுபட்ட லாரிகளுக்கும் ஒப்பந்தம் வழங்கக் கோரி நாளை முதல் LPG டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் அறிவித்தது.

இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி எண்ணெய் நிறுவனங்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில் நாமக்கல்லில் தென்னிந்திய டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of