நாம் தமிழர் கட்சிக்கு அடித்தது ஜாக்பாட்?

262

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டுள்ள நிலையில், ஒரு புறம் கூட்டணி முடிவுகளும், மற்றொரு புறம் தொகுதி அறிவிப்புகள் என தமிழகம் முழுவதும் அரசியல் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் கட்சியினர் தனித்து போட்டியிட்டனர். இந்த சின்னத்தை மக்கள் மனதில் கொண்டுபோய் சேர்க்கும் விதமாக நாம் தமிழர் கட்சியினர் தங்களது கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தை அச்சிட்டு வந்தனர்.

பாராளுமன்ற தேர்தலிலும் இந்த சின்னத்தையே ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் கூறி இருந்தனர். ஆனால், துரதிஷ்டவசமாக அந்த சின்னத்தை வேறு ஒரு கட்சிக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்திற்கு பதிலாக இன்று கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

விவசாயம் சார்ந்த சின்னம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.