லுக்லா விமானநிலையத்தில் விபத்து இணை விமானி உட்பட இருவர் பலி

459

நேபாளத்தில் லுக்லா விமான நிலையத்தில் இன்று ஒரு சிறிய ரக விமானம் புறப்பட்டது, அப்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடு தளத்தில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்துக்கு நுழைந்தது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் மீது மோதி நொறுங்கியது.

lukla-airport

இந்த விபத்தில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரின் இணை விமானி துங்கானா, உதவி சப்- இன்ஸ்பெக்டர் ராம்பகதூர் காட்கா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

படுகாயம் அடைந்த மற்றொரு உதவி சப்-இன்ஸ்பெக்டர் ருத்ரா பக்தூர் ஸ்ரேஸ்தா காத்மண்டுவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர்கள் தவிர ஹெலிகாப்டரில் அமர்ந்து இருந்த விமான கேப்டன் ஆர்.பி. ரொசாயா, கேப்டன் சேட் குரங் ஆகியோர் காயம் அடைந்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of