சினிமா மோகத்தால் ஏற்பட்ட விபரீதம்.

244
vadapalani14.3.19

வடபழனி, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா நிறுவனம் என்கிற பெயரில் சிலர் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக தியாகராயநகர் துணை கமி‌ஷனர் அசோக்குமாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் விருகம்பாக்கம் நடேசன் நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. அந்த வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு ஒரு அறையில் இளம்பெண்களை தவறான முறையில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. சாலிகிராமத்தைச் சேர்ந்த ராஜா பெருமாள், நாமக்கலைச் சேர்ந்த பாலாஜி என்கிற பாலு, மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பறவர்களே இதற்கு காரணம் என்று விசாரணையில் தெரிந்தது.

சென்னை மற்றும் திருச்சியை சேர்ந்த 3 இளம்பெண்களை மீட்டு மைலாப்பூரில் உள்ள மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர். விசாரணையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சினிமா தயாரிப்பு நிறுவனம் என்கிற பெயரில் வீட்டை வாடகைக்கு எடுத்து சினிமா வாய்ப்பு தருவதாக இளம்பெண்களை அழைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததும் தெரிய வந்தது.