ரஜினியின் மாஸ் – ட்ரெண்டாகும் தர்பார் Second Look | Darbar | Second Look

461

ரஜினிகாந்த் ! தமிழ் சினிமா உலகில் 49 ஆண்டுகளாய் ரசிகர்களை தன்னை நோக்கி இழுக்கும் புவிஈர்ப்பு விசையாய் செயல்படும் ஒரு இணையற்ற நடிகர் என்பது உலகறிந்தது. பல ரசிகர்களை கொண்ட நடிகர்களுக்கு மத்தியில் பல நடிகர்களை தனது ரசிகர்களாக கொண்ட மகா நடிகன்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த பேட்டை திரைப்படம் ரசிகர்கள் மனதில் பழைய சூப்பர்ஸ்டாரை மீண்டும் கண்முன் கொண்டுவந்தது. இந்நிலையியல் தற்போது இயக்குனர் முருகதாஸ் அவர்களின் இயக்கத்தில் படமாகும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகின்றார்.

Darbar second look

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் First Look வெளியான நிலையில் ஓணம் பண்டிகையான இன்று தர்பார் படத்தின் இரண்டாவது லுக் வெளியாகும் என்று இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியளவில் வெளியானது தர்பார் படத்தின் இரண்டாம் லுக். கருப்பு பனியனில் கோவம் கொண்ட முகத்தோட சூப்பர் ஸ்டாரை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்து வருகின்றனர் என்றால் அது மிகையல்ல.