பார்த்திபன் மீது பாய்ந்த FIR? காரணம் இந்த பாடலாசிரியர் தான்!

890

பார்த்திபன் வீடு அமைந்துள்ள கே.கே.நகர் பகுதியில், பாடலாசிரியர் ஜெயம்கொண்டான், ‘கவிஞர் கிச்சன்’ என்கிற பெயரில் உணவகம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இங்கிருந்து தான் பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு சாப்பாடு சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பார்த்திபன் வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால், இவர் தான் வேலைக்கு ஆட்கள் அனுப்பி வைத்துள்ளார். இவருக்கும், இயக்குநர் பார்த்திபனுக்கும் இடையே கருத்து வேறுபாடு காணரமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பார்த்திபனை சந்திப்பதற்காக ‘ஒத்த செருப்பு’ படத்தின் டப்பிங் பணி நடை பெற்றுக்கொண்டிருந்த, அவரை சந்திக்க சென்றுள்ளார் ஜெயம்கொண்டான்.

அப்போது திடீரென வெளியே வந்த பார்த்திபன் ஜெயம்கொண்டானை கடுமையாக தாக்கி, மேலே இருந்து கீழே தள்ளி விட்டுள்ளார் என்று நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஜெயம்கொண்டான் புகார் அளித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தமிழ் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of