“நம்பிக்கை தருவதே நல்லரசு..” – சி.ஏ.ஏ. குறித்து வைரமுத்து கவிதை

409

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டம், கலவரமாக மாறி, 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து பல்வேறு அரசியல் தலைவர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கவிஞர் வைரமுத்து சி.ஏ.ஏ தொடர்பாக கவிதை வடிவிலான கருத்தொன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்.,

“எதிராக வாக்களித்தவர்க்கும்

நம்பிக்கை தருவதே நல்லரசு.

அச்சப்படும் சிறுபான்மைக்கு

என்ன மொழியில் எந்த வழியில்

நம்பிக்கையூட்டப் போகிறீர்கள்?

நம்பிக்கை கொடுங்கள்;

நன்மை விளையும்”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். வைரமுத்துவின் இந்த டுவீட்டை பார்த்த நெட்டிசன்கள், தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of