நாடு தூய்மையாக ஒருவிரல் அழுக்கானால் தவறில்லை! வைரமுத்து!

340

தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்து கொண்டிருக்கிறது. திரையுலக பிரபலங்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.

வாக்களித்த பிறகு மை படிந்த விரலை புகைப்படம் எடுத்து ட்வீட் செய்கிறார்கள். இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்துவும் ட்வீட் செய்துள்ளார். ஒட்டுமொத்த நாடு தூய்மையாக ஒற்றைவிரல் அழுக்கானால் தவறில்லை. வாக்குத் தவற வேண்டாம் என்று வைரமுத்து டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ராதிகா தனது கணவர் சரத்குமாருடன் சென்று வாக்களித்துள்ளார். அனைவரையும் வாக்களிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்ருதி ஹாஸன் தனது தந்தை கமல் ஹாஸனுடன் சென்று வாக்கு செலுத்திவிட்டு வந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of