“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு..” கபாலி பட வசனம் மூலம் மாஸ் காட்டிய மு.க.அழகிரி..!

53982

தமிழகத்தின் முக்கியமான அரசியல்வாதிகளில் ஒருவர் மு.க.அழகிரி. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் அண்ணனாகிய இவர், தி.மு.கவில் இருந்து விலகி இருக்கிறார்.

இதற்கிடையே, அதிமுக அல்லது பாஜகவில் மு.க.அழகிரி இணைய இருப்பதாக சமீபத்தில் பரவலாக பேசப்பட்டது. ஆனால், தன் தரப்பு விளக்கத்தை அவர் அளிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில், தனது முகநூல் பக்கத்தில் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்க்கும்போது, மு.க.அழகிரி மீண்டும் மாஸ் காட்ட தயாராகிறாரா என்று எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

அதாவது, அவர் அதிமுக, பாஜக, ரஜினி தொடங்க இருக்கும் கட்சி அல்லது தனது புதிய கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாக பேசப்படுகிறது.

Advertisement