தேர்தல் நிலைப்பாடு குறித்து மு.க.அழகிரி அதிரடி பேட்டி

235

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிடுகிறார். இதனால் அண்ணா அறிவாலயம் மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்த நிலையில் திமுக கட்சிக்கு மீண்டும் இடையூறு ஏற்படுத்த தொடங்கி இருக்கிறார் முன்னாள் திமுக உறுப்பினர், முன்னாள் எம்.பி மு.க அழகிரி. முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் மு.க அழகிரி மீண்டும் திமுக கட்சியில் சேர்வதற்கு அழைப்புகளை விடுத்தார்.

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மு.க அழகிரியை திமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் மு.க அழகிரி சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி பேரணி செய்தார். ஆனால் அந்த பேரணி பெரிய அளவில் வெற்றிபெறவில்லை.

அதன்பின் அரசியலில் மு.க அழகிரி அமைதியானார் . இந்த நிலையில் தற்போது மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு வந்துள்ளார். தேர்தல் காரணமாக அவர் மீண்டும் அரசியலில் லைம் லைட்டில் இடம்பிடித்துள்ளார்.

திமுக கட்சி தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டபிறகு மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
அப்போது நாடாளுமன்றத் தேர்தல் நிலைபாடு குறித்து ஒரு வாரத்திற்குள் அறிவிப்பேன் என தெரிவித்தார்.