அதுக்கு ஸ்டாலின் சரிபட்டு வரமாட்டாரு!! அமைச்சர் கடும் தாக்கு!!

623

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்தநாள் விழா, அ.தி.மு.க. அரசின் சாதனை மற்றும் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

இதற்கு வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமை தாங்கினார்.

மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வி.டி.ராஜன் அனைவரையும் வரவேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது கூறியதாவது:-

“தமிழக மக்கள் மனதில் கடந்த 40 ஆண்டுகளாக அ.தி.மு.க. நீங்காத இடம்பிடித்துள்ளது. ஆனால் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வரும் நாட்களை அதன் நிர்வாகிகள் எண்ணிக்கொண்டு இருக்கின்றனர் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால் தி.மு.க.வில் மூத்த நிர்வாகிகளுக்கு உரிய மதிப்பு கிடைப்பதில்லை என தி.மு.க.வினரே புலம்பி வருகின்றனர். எனவே ‘தி.மு.க.வுக்கு தலைமை தாங்கும் தகுதி மு.க.ஸ்டாலினுக்கு இல்லை”.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement