திமுக வேட்பாளர்கள் வெளியீடு குறித்த அறிவிப்பு! ஸ்டாலின்!

553

தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:-விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிட போகிறது?

பதில்:-அவர்கள் கட்சியின் சார்பில் வேட்பாளரை அறிவிக்கின்ற போது, அதை அவர்கள் தெரிவிப்பார்கள்.

கேள்வி:- தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?. நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தலுக்கு தனித்தனியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுகிறதா?

பதில்:- தி.மு.க. தனியாக தேர்தல் அறிக்கையை தயாரித்துக்கொண்டிருக்கின்றது. தற்போது அந்தப்பணிகள் முடிவடையக்கூடிய சூழ்நிலைக்கு வந்திருக்கிறது. இன்னும் 5 நாட்களுக்குள் முறையாக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஒட்டுமொத்தமாக அறிக்கை தரப்படும். அதேபோல், 18 தொகுதிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல் வரப்போகின்றது அதற்கும் தனியாக தயாரிக்கப்பட்டு அதுவும் முறையாக வழங்கப்படும்.

கேள்வி:-தி.மு.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும்?

பதில்:-17-ந்தேதி (நாளை) வெளியிடப்படும்.

கேள்வி:-இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?

பதில்:-நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படுகின்ற போது 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலையும் தி.மு.க வெளியிடும்.