CAA, NRC என்ன என்பதை முதலமைச்சர் பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும் – கனிமொழி

255

CAA, NRC என்ன என்பதை முதலமைச்சர் பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடிமக்கள் பதிவேடு தொடங்கும் போது, பிரச்சனைகளும் தொடங்கும் என்று கூறினார்.

CAA, NRC என்ன என்பதை முதலமைச்சர் பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் இது இன்று பாதிக்குமா? நாளை பாதிக்குமா? என்பதை தாண்டி அரசியலமைப்பை  கொச்சைப்படுத்தும் சட்டம் என்று கனிமொழி தெரிவித்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of