வாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு! திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு!

635

கரூர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்றிரவு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியது பின்வருமாறு:-

“இந்த தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளர் தி.மு.க.வை சேர்ந்த செந்தில்பாலாஜி கார்வழி ஊராட்சியில் 2,000ரூபாயை ஜெராக்ஸ் எடுத்து வினியோகித்து விட்டு, பணம் மாலையில் கொடுப்போம் என கூறி தில்லுமுல்லு செய்துள்ளார்.

அரவக்குறிச்சியில் இதைவிட கேவலமாக வேலை செய்ய எதுவுமில்லை.
நம்பர் எழுதி ஸ்டார் குறியீடு போட்டு டோக்கன், ரூ.2,000-ன் ஜெராக்ஸ் தாள் ஆகியவற்றை மஞ்சள் துண்டு போட்டிருந்தவர்களே (தி.மு.க.) வினியோகித்தனர். பச்சை துண்டுபோட்டிருந்த (அ.தி.மு.க.) எங்களது ஆட்கள் தான் அவர்களை பிடித்தனர்.

டோக்கன் கொடுப்பதில் இவர்கள் கை தேர்ந்தவர்கள். ஆர்.கே.நகரில் இது போல் டோக்கன் வினியோகித்து ஒரு ஆளை ஜெயிக்க வைத்தனர். அந்த டோக்கன் எல்லாம் அரவக்குறிச்சியில் எடுபடாது.”

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of