மீண்டும் ஓல்லியாக மாறிய சிம்பு! வைரலாகும் புகைப்படம்!

865

இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசனின் திருமணம், கடந்த 26ந்தேதி சென்னை அண்ணா நகரில் உள்ள மணமகள் இல்லத்தில் நடைபெற்றது.

இவர்களது திருமண வரவேற்பு நேற்று மாலை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்தது. இதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். உடல் எடையை குறைப்பதற்காக லண்டனுக்கு சென்ற நடிகர் சிம்பு, தன் தம்பியின் திருமணம் மற்றும் வரவேற்பில் கலந்து கொண்டுள்ளார்.

சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்திற்காக தனது உடலை குறைத்து வந்தார்.

இந்நிலையில், குறளரசன் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட சிம்புவின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.