95 கோடி ரூபாய் மதிப்பில் அடுக்குமாடி பேருந்து நிலையம் காணொளி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்

1433

சென்னை, மாதவரத்தில் 95 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி பேருந்து நிலையத்தை, தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், சென்னை மாதவரத்தில் 8 ஏக்கர் பரப்பளவில் 95 கோடி ரூபாய் செலவில் புதிய அடுக்குமாடி பேருந்து நிலையம் கட்டப்படும் என கடந்த 2011ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, அதற்கான பணிகள் நடைபெற்று, தற்போது பேருந்து நிலையம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளிக்காட்சி மூலம் திறந்துவைத்தார். இங்கிருந்து, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement