‘நா இப்ப போலீஸாயிட்டேன்’.., என் அண்ணனுக்கு சமர்ப்பிக்கிறேன்.., மதுவின் சகோதரி

881

‘மது’ கடவுளின் தேசம் எனக் கூறப்படும் கேரளாவில் உணவு திருடியதாக கூறி அடித்துக்கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர். பாலக்காடு பகுதியில் இருந்த வனத்தில் உள்ள குகைகளில் அவர் வசித்து வந்துள்ளார். வனத்தில் இருக்கும் அவர் இரவில் வந்து உணவுகளைத் திருடுவதாகக் கூறி அகாலியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுவை கட்டிவைத்து அடிக்கும்காட்சி சமூகவலைதளத்தில் பரவியது. இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு பிப்ரவரி 22 ஆம் தேதி ஆகும்.இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 16 பேரைக் கைது செய்தனர். பிப்ரவரி 23 ஆம் தேதி உடற்கூறு ஆய்வு செய்வதற்காக மதுவின் உடல் அகாலியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது.

பிணவறையில் சகோதரன் சடலமாக இருக்க கனத்த இதயத்தோடு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த மதுவின் சகோதரி சந்திரிகா நேர்முகத் தேர்வுக்காகச் சென்றார். எதிர்பாராத மரணம் இது. இயற்கையோ, நோயோ அந்த 27வயது இளைஞனின் உயிரைப் பறிக்கவில்லை.குறிப்பிட்ட சிலரின் வன்முறையில் மது மரணித்தான். சகோதரன் இறந்த துக்கத்தோடு காவலர் தேர்வு, பயிற்சி போன்றவற்றை சந்திரிகா எதிர்கொண்டார். மது மரணித்து ஓராண்டு ஆகிவிட்டது. சந்திரிகா இன்று காவலராகிவிட்டார். தன் சகோதரனுக்கு இந்தப் பணியை சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார், அண்ணனின் இழப்பை ஏற்க முடியாத சந்திரிக்கா நேர்காணலை எதிர்கொள்ள முடியாது என சோர்ந்துப்போனார். இருப்பினும் தனது குடும்பம் கட்டாயப்படுத்தியதால் நேர்காணலில் கலந்துக்கொண்டார் சந்திரிக்கா.

Advertisement