பாலியல் கொடுமைக்குள்ளான சிறுமி! சிறுமியை தண்டித்த கொடூர கிராமம்!

557

மத்தியப்பிரதேசத்தின் ராஜ்கர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் தனது கிராமத்தைச் சேர்ந்த இளைஞனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டுக்கு ஆளான இளைஞன் போலிசாரால் கைது செய்யப்பட்டான். இதையடுத்து சிறுமியின் குடும்பம் கிராமப்பஞ்சாயத்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டது.

தங்கள் மீதான ஒதுக்கலை விலக்கக் கோரி சிறுமியின் தந்தை பஞ்சாயத்தை கூட்டிய போது, சிறுமியைப் புனிதப்படுத்த வேண்டும் என்றும், அதற்காக ஊரில் உள்ள அனைவருக்கும் கறி விருந்து கொடுக்க வேண்டும் என்றும் பஞ்சாயத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ஆறுதலாக இல்லாமல் கறி சோறு கேட்டு கொடுமைப்படுத்திய பஞ்சாயத்து தலைவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement