பதிவுத்துறை வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுகிறது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

238

நிலத்தின் சர்வே எண்ணில் உள்ள தவறை சரி செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், வட்டாட்சியரின் கடிதத்தின் மீது 2 ஆண்டாக நடவடிக்கை எடுக்காத தாந்தோணி வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

வருவாய்த் துறையிலிருந்து லஞ்சம் தொடங்குவதாக குறிப்பிட்ட நீதிபதி, பதிவுத்துறையில் பெரும்பாலான வேலைகள் மேஜைக்கு கீழ் தான் நடைபெறுவதாக தெரிவித்தார். லஞ்சம் வாங்கிக் கொடுப்பதில் பத்திரப்பதிவு எழுத்தர்கள் ஏஜெண்டுகளாக செயல்படுவதாக கூறிய நீதிபதி, ஊழல் தடுப்பு பிரிவு விழிப்புடன் இருந்தால் அரசு அதிகாரிகள் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துக்கள் வெளி உலகத்திற்கு தெரிய வரும் என்றும் தெரிவித்தார்.

Advertisement