பிளாஸ்டிக்  பொருட்களை அடியோடு ஒழிக்க சென்னை பல்கலைக்கழகம் நடவடிக்கை

529

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பிளாஸ்டிக் பொருட்களை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஒன்றாம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் இல்லா தமிழகம் என்ற தலைப்பில், சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைதொடர்ந்து நடைபெற்ற, விழிப்புணர்வு பேரணியை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி தொடங்கி வைத்தார். இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு பேரணி சென்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பிளாஸ்டிக்  பொருட்களை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்