வைகை அணையில் இருந்து 1,500 கனஅடி தண்ணீர் திறப்பு

165

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட இந்த அணை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

அணையின் நீர்மட்டம் 41.88 அடியாக இருந்த நிலையில், வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறை கிணறுகளில் நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6 மணி முதல் 1500 கனஅடி திறக்கப்பட்டது. இது, படிப்படியாக 850 மற்றும் 300 கனஅடியாக குறைக்கப்பட்டு, 28-ம் தேதி காலை 6 மணிக்கு முற்றிலும் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வரை செல்லும். சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக வைகை அணையில் வைத்திருந்த தண்ணீர், நேற்று மாலை குடிநீருக்காக திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of