மதுரை விமான நிலையத்தின் பெயர் மாற்றப்படுமா? – விமான போக்குவரத்துத்துறை பதிலளிக்க உத்தரவு!!

141
madurai-air-port name changing issue

மதுரை விமான நிலையத்திற்கு மீனாட்சி அம்மன் பெயரை வைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களிடையே கோரிக்கை எழுந்திருந்தது.

இந்நிலையில் இந்த கோரிக்கையை நிறைவேற்றக்கோரி, செல்வகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து 6 மாதக்காலத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டனர்.