அமமுக பிரமுகர் கொலை…3 வீட்டில் கொள்ளை.. ஹாயாக கோழிக்கறி சாப்பிட்ட கொடூர கும்பல்..! – அதிரவைக்கும் சம்பவம்…

846

மதுரை அருகே அமமுக நிர்வாகி ஒருவரை கொலை செய்துவிட்டு 3 வீடுகளில் கொள்ளையடித்தது மட்டுமல்லாமல், அந்த கொடூர கும்பல் ஹாயாக கோழிக்கறி சாப்பிட்டு சென்ற அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள ஒரு கிராமம் உதினப்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்த அமானுல்லா (எ) காதர் பாஷா அமமுக வின் மதுரை புறநகர் மாவட்ட சிறுபான்மை அணி செயலாளராகவும், அந்த கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.

சம்பவத்தன்று, அவருக்கு சொந்தமான இடத்தில் குடிநீரேற்று நிலையம் கட்டி வந்த காதர் பாஷா அதை பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து அவர் பள்ளிவாசல் அருகே இருசக்கர வாகனத்தின் அருகே ரத்தக்கறையோடு கிடந்துள்ளார்.


இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் அருகில் உள்ள சிங்கம்புணரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் பரிசோதனை செய்த மருத்துவர்கள், காதர் பாஷா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதனை கேட்ட உறவினர்கள் கதறியழுதனர். விசாரணை நடத்தியதில் முதற்கட்டமாக அவரை கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இந்த கொடூர செயலை செய்துவிட்டு, ஊரே பரபரப்பாக காதர்பாஷாவை பார்க்க சென்றதை பயன்படுத்தி,யாரும் இல்லாத மூன்று வீடுகளில் புகுந்து தனது கைவரிசையை காட்டியுள்ளனர். ஏறத்தாழ 15 சவரன் நகை மற்றும் பணத்தை திருடியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் ஒரு வீட்டில் இருந்த கோழிக்கறி குழம்பையும் எடுத்துச் சென்று சாப்பிட்டுள்ளனர்.

அமமுக நிர்வாகி கடந்த தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொல்லப்பட்டாரா?  அல்லது இந்த 3 வீடுகளில் கொள்ளையடிப்பதற்காக திசைதிருப்பி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement