தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நாளை தொடங்கி வைக்கிறார்- பிரதமர்

530

அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நாளை ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வரயுள்ளார். இதனால் அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல் அவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்திலும் பந்தல் மற்றும் மேடையமைக்கும் பணிகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில், நாளை அவர் காணொளி காட்சி மூலம் கொடியசைத்து துவங்கி வைக்கும் சென்னை- மதுரை, தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது வியாழக்கிழமை தவிர்த்து வாரத்தின் மற்ற ஆறு நாட்கள் இந்த ரயில் இயக்கப்படும்.இது சென்னை எழுப்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காலை 10:25-க்கு திருச்சியை அடையும் என்றும், அதனைத்தொடர்ந்து 12:30 மணிக்கு மதுரையை சென்றடையும் என்று சொல்லப்படுகிறது.

மீண்டும் மாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு இரவு 9:30 மணிக்கு சென்னையை வந்தடையும். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு கூடுதலான ரயில் சேவைகள் வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.சென்னையில் இருந்து பகல் நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ஏற்கனவே மதுரைக்கு இயக்கப்படும் நிலையில், புதிதாக தொடங்கப்படவுள்ள இந்த சேவை பொதுமக்களுக்கு பெரிதும் பயன்படும்.

வைகை எக்ஸ்பிரஸ் பயணநேரம் ஏழரை மணிநேரம் என்கிற நிலையில், புதிய சேவையின் மூலம் ஆறரை மணி நேரத்தில் சென்னையில் இருந்து மதுரைக்கு சென்று விடலாம்.

அதுமட்டுமின்றி, இந்த ரயிலில் தானியங்கி கதவுகள், wi-fi வசதி, விமானங்களுக்கு இணையாக இருக்கை வசதிகள் என அதிநவீன வசதிகள் கொண்டது தேஜாஸ் ரயில்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of