அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த தனித் தனி குழுக்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

407

 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்த விழாக் குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சி.ராகவனை நியமித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஓய்வு பெற்ற நீதிபதி சி. ராகவன் தலைமையில், வழக்கறிஞர்கள் திலீப்குமார், சரவணன், ஆனந்த் சந்திசேகர் அடங்கிய குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் ஜல்லிக்கட்டு போட்டியின் போது எந்த நபருக்கும், காளைக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது என தெரிவித்துள்ளார். பரிசுப்பொருட்கள், தொகை உள்ளிட்டவற்றை ஒருங்கிணைப்புக் குழுவினரே வசூலிக்க வேண்டும் என்றும், அது தொடர்பான கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

ஜல்லிக்கட்டு நிகழ்வில் கட்சி மற்றும் சமூகம் தொடர்பான கொடி மற்றும் தலைவர்களின் பிள்க்ஸ் போர்டுகள் வைக்கப்படக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.