சித்திரை திருவிழாவிற்காக தேர்தலை ஒத்திவைக்க முடியாதா? – தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் சரமாரிக்கேள்வி

105

சித்திரை திருவிழாவிற்காக  மதுரை  தேர்தலை ஒத்திவைக்கமுடியாது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மதுரையில் பிரசித்தி பெற்ற திருவிழாவான சித்திரை திருவிழா.எதிர்வரும் 18 மற்றும் 19 ம் தேதி திருவிழா நடைபெறுவதால் தேர்தலை ஒத்திவைக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் உயர் நிதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், 100 சதவீத வாக்குப்பதிவிற்கு தேர்தல் ஆணையத்திற்கு ஆர்வம் இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் உரிய பதிலை அளிக்க உத்தரவிட்டுள்ளது.