ஆன்லைனில் சீட்டு விளையாடியதால் நடந்த சோகம்? வெளியான பகீர் தகவல்!

477

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடசுப்பிரமணியம். அவரது மனைவி மீனாட்சி. தொழில்முனைவோருக்கான பயிற்சி மையம் நடத்தி வந்த வெங்கடசுப்பிரமணியமும், அவரது மனைவியும் கடந்த 2 தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டனர்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இவர்களின் தற்கொலை குறித்து விசாரணை செய்த போலீசார், கடன் பிரச்சானை காரணமாக உயிரிழந்தனர் என்று தெரிவித்தனர் என்றும் கூறப்படுகிறது.

மேலும், ஆன்லைன் சீட்டு விளையாடி பணத்தை இழந்ததாகவும், இதனால் பெருமளவு பணத்தை இழந்து கடனாளி ஆனதாகவும், அதனால் தம்பதி தற்கொலை செய்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of