டெல்லிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் பொள்ளாச்சிக்கு ஏன் தரவில்லை.., நீதிபதிகள் வேதனை…

583

பொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட இளம் பெண்களிடம் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி, அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததோடு ஆபாச வீடியோ எடுத்து மிரட்டியதாக எழுந்துள்ள புகாரில் இதுவரை நால்வர் கைதாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய போதிலும், நிர்பயாவிற்கு தரப்பட்ட முக்கியத்துவத்தை தேசிய ஊடகங்கள், பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தரவில்லை என்றும், தேசிய ஊடகங்கள் ஊரகப் பகுதிகளை புறக்கணிப்பதாகவும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த சாம்பசிவம் என்பவர் கஜா புயல் பாதிப்பு நிவாரணம் தொடர்பாக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளனர். இவ்வழக்கின் போதுதான், தேசிய ஊடகங்கள் நகர்ப்புறங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஊரகப் பகுதிகளுக்கு கொடுப்பதில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.