காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் மூட நீதிமன்றம் உத்தரவு

225

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரதீஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.மக்கள் குடியிருப்புகளுக்கு அருகாமையில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இதனால் பொதுமக்கள் இன்னல்களுக்கு ஆளாகுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரும் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லால் காந்தியடிகள் நினைவுதினமான நாளை தமிழகம் முழுவதும் ஒருநாள் மட்டும் டாஸ்மாக் கடைகளை மூடவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பான வழக்கு பிப்ரவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.