வருகை பதிவை ரெஜிஸ்டர் செய்யுங்க.. அரசு மருத்துவமனைகளுக்கு வருகிறது பயோ மெட்ரிக்.. – ஐகோர்ட் கிடுக்குப்பிடி..!

644

கடந்த 2017 ஆம் ஆண்டு அனைத்து அரசு மருத்துவமனையிலும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவிற்கான அரசாணையை, 4 மாத காலத்திற்குள் முழுமையாக நடைமுறைப்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

ஆனால் உயர்நீதிமன்ற கிளையின் இந்த உத்தரவை அரசு செயல்படுத்தப்படவில்லை இதனால் அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.மேலும் உத்தரவை பின்பற்றதா அரசு மீது ந்டவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவின் மீதான விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்த அரசுக்கு இன்னும் 6 மாத கால கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் இன்னும் 3 மாதத்திற்குள் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் மேலும் அது தொடர்பாக ஏப்ரல் 24ல் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கரராக உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of