ஸ்டெர்லைட்டை வேண்டாம் என சொல்லும் அரசு! ஏன் மக்களை துன்புறுத்துகிறது? நீதிமன்றம் நறுக்!

535

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அனுப்பட்ட சம்மனை எதிர்த்து மோகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக 107, 111 பிரிவுகளின் கீழ் அனுப்பப்பட்ட சம்மன்களில் இறுதி முடிவெடுக்கக் கூடாது என்றும் 107, 111 பிரிவுகளின் கீழ் புதியதாக சம்மன்கள் அனுப்பக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

அரசின் நோக்கம் மக்களை பதுகாப்பதா? துன்புறுத்துவதா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என்பதே அரசின் கொள்கை முடிவாக இருக்கும் போது, அதே கருத்து கொண்டவர்களை துன்புறுத்துவது ஏன் என்று சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களை சட்டவிரோதமாக கைது செய்வதை நிறுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of