அரசுக்கு பொதுநலன் இல்லை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நறுக்

435

தேனியில் உள்ள மறுவாழ்வுமையத்தின் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அடைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது தேனிமாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் கடைகளை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல்செய்யுமாறு உத்தரவிட்டார்.

மேலும்,டாஸ்மாக் கடைகளின் மூலம் கிடைக்கும் வருவாய் அரசின் திட்டங்களுக்காக செயல்படுத்தப்படுகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் ஊரடங்கு நேரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதில் பொதுநலன் எதுவும் இல்லை என்று கூறினர்.

டாஸ்மாக் மதுபானக்கடைகளில் சுகாதாரம், சமூக இடைவெளி ஆகியவை கடைபிடிக்கப்படுகிறது என உத்தரவாதம் அளிக்கமுடியுமா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு விசாரணை செப்டம்பர் மாதம் 3- ஆம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement