ஆண்களே உஷார்: திருமணம் என்ற பெயரில் நகை, பணம் மோசடி செய்யும் பெண்

743

மதுரை: ஆண்களை மயக்கி திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

அனுப்பானடியைச் சேர்ந்த பிரதீப் என்பவர் புவனேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து சில தினங்களுக்கு முன் பதிவு திருமணம் செய்துகொண்டனர்.

இதனையடுத்து, திடீரென்று வீட்டில் இருந்த புவனேஸ்வரி 2½ பவுன் நகையுடன் மாயமானது தெரியவந்தது. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் பிரதீப்பின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

விசாரணை நடத்திய போலீசார் புவனேஸ்வரிக்கு ஏற்கனவே 3 திருமணங்கள் நடந்திருக்கிறது எனவும்; மேலும், ஆண்களை தனது அழகில் மயக்கி அவர்களை ஏமாற்றி திருமணம் செய்து நகை, பணத்தை மோசடி செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தனர்.

இந்த மோசடி வழக்கில் கடைசியாக பிரதீப்பிடம் அவர் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. மேலும் புவனேஸ்வரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆரோக்கியம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of