எதிர்பார்த்த மொய்ப்பணம் வசூலாகாததால் பெண் தற்கொலை!

311

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி நடுத்தெருவை சேர்ந்த நாகம்மாள் என்பவர் கணவரை பிரிந்த நிலையில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொய் விருந்து நடத்தி அதன் மூலம் வசூலாகும் பணத்தை வட்டிக்கு விடுவது நாகம்மாளின் வழக்கமாக இருந்து வந்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன் இதே போல மொய் விருந்து நடத்திய நாகம்மாள் 40 லட்சம் ரூபாய் வசூலாகும் என கணக்கிட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் 12 லட்சம் ரூபாய் மட்டுமே வசூலானதால் நாகம்மாள் வேதனை அடைந்துள்ளார். கடந்த சில நாட்களாக இதுகுறித்து புலம்பியபடியே இருந்த நாகம்மாள் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது.

இச்சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of