கர்ப்பிணி பெண்ணை அரை நிர்வாணமாக்கி அடித்து துன்புறுத்திய போலி சாமியார் – கணவர் உட்பட 4 பேர் கைது

813

மதுரையில் பேய் ஓட்டுவதாக கூறி கர்ப்பிணி பெண்ணை அரை நிர்வாணமாக்கி போலி சாமியார் அடித்து துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நரசிங்கம் பாதிரியார் தெருவைச் ச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி முத்துப்பாண்டியம்மாள் இவர்களுக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் தற்பொழுது முத்துப்பாண்டியம்மாள் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.


இந்த நிலையில் இவரது கணவர் விஜயக்குமார், தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி ஏற்படும் தகராறால் ஒரு கட்டத்தில் கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் வீட்டு வேலை செய்யமுடியாமல் படுத்தபடியே இருந்திருக்கிறார்.

இதை கண்ட கணவர் விஜயக்குமார், மனைவிக்கு பேய் பிடித்திருக்கிறது என கூறி தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு சாமியாரிடம் முத்துப்பாண்டியம்மாளை அழைத்துச் சென்றுள்ளார். அந்த சாமியார் முத்துப்பாண்டியம்மாளை பேய் ஓட்டுவதாக கூறி சாட்டையால் கடுமையாக அடித்து துன்புறுத்தியுள்ளார்.

அதுமட்டுமின்றி ஒரு கட்டத்தில் முத்துப்பாண்டியம்மாளின் சேலையை உருவி அடித்து துன்புறுத்தவே, வலியால் துடித்த அந்த கர்ப்பிணிப் பெண் அரை நிர்வாணத்தோடு தனது 1 1/2 வயது குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகி பாதுகாப்பு கேட்டு கதறியுள்ளார்.

 

உடனே சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை, , போலி சாமியார் செல்வம், கணவர் விஜயக்குமார், நண்பர்கள் சேவுகப்பாண்டி,சுப்ரமணி ஆகியோரை கைது செய்தனர்.

குடிகார விஜயக்குமார் போன்ற உலகக்குடி பேய்கள் இருக்கும் வரை போலி சாமியாரின் நடமாட்டமும், அட்டூழியங்களும் தொடர்கதையாகும் என்பதில் ஐயமில்லை.