வகுப்பறைக்கு கொண்டு வந்த புடவை..! சிறுமி செய்த கொடூரம்..! அலறிய மாணவிகள்

2083

மதுரை மாவட்டம் கே.புதூர் அருகே உள்ள காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவருக்கு அர்ச்சனா என்ற மகள் உள்ளார். லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளியில் அர்ச்சனா 11-ஆம் வகுப்பு படிந்து வந்துள்ளார். ஒரு வாரமாக ஸ்கூலுக்கு செல்லாமல் இருந்த அர்ச்சனா இன்று வந்திருக்கிறார்.

அதுவும் மிக சீக்கிரமாக பள்ளிக்கு வந்து, வகுப்பறையில் தனியாக இருந்துள்ளார். சிறிது நேரம் கழித்து அர்ச்சனாவின் சக மாணவிகள் வகுப்பறைக்கு வந்து பார்த்துபோது, தூக்கில் தொங்கிய நிலையில் அர்ச்சனா சடலமாக கிடந்துள்ளார்.

இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள், பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து கூறியுள்ளனர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய காவல்துறையினர், கடந்த 1 வாரமாகவே அர்ச்சனா சோகமாக இருந்ததாகவும், பள்ளிக்கு வரும்போது அம்மாவின் சேலையை எடுத்து வந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதை கண்டறிந்தனர். அர்ச்சனா எதற்காக தற்கொலை செய்தார், ஒரு வாரம் ஸ்கூலுக்கு ஏன் வரவில்லை, வீட்டில் ஏன் இதை பற்றி கேட்கவில்லை, என்றெல்லாம் இனிமேல்தான் போலீஸ் விசாரணையில் தெரியவரும்.

Advertisement