நீங்க ஏன் சிரமப்படுறீங்க சார்..! – நாங்களே டீடைலா எழுதியிருக்கோம் பாருங்க..! – கொள்ளையடித்த திருடர்கள் போட்ட நாமம்..!

567

மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் சேர்ந்து மதுரை மாநகர் கோமதிபுரம் பகுதியில் அப்பள கம்பெனி ஒன்றை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக அப்பள கம்பெனியில் பணம் திருடப்பட்ட நிலையில் அது தொடர்பாக புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அதே அப்பள கம்பெனியின் உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த கணினி, தராசு, மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை மொத்தமாக கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட நிறுவனத்தில் உள்ள சுவர்களில் நாமத்தை வரைந்துவிட்டு அவர்கள் சென்றுள்ளனர்.

மேலும் எந்தெந்த பொருட்களை எந்த பகுதியில் கொள்ளையடித்தோம் என்ற தகவலையும், சில புரியாத ஆங்கில வார்த்தைகளையும் சுவர் மற்றும் கதவுகளில் எழுதிவிட்டு சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் இருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொள்ளையடித்துவிட்டு சாக்கு மூட்டைகளில் பொருட்களை எடுத்துசென்றது அருகில் உள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் துணிச்சலுடன் அடையாளங்களை வரைந்துவிட்டு போலீசாருக்கு சவால் விடுக்கும் வகையில் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of