‘மாஃபியா’ பிப்ரவரி 21 வெளியிட படக்குழு திட்டம் | Mafia

448

“செகண்ட் இன்னிங்ஸ்” இது பொதுவாக பயன்படுத்தப்படும் சொல், இருப்பினும் சினிமாத்துறை என்று வரும்போது இதற்கு தனி அர்த்தமே உண்டு. அரவிந்த் சாமி, ராஜ்கிரண், ரேவதி போன்ற பல நடிகர் நடிகைகள் திரையுலகிற்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் பட்டாசாய் களமிறங்கினர். தற்போது இந்த பட்டியலில் முக்கியமான நடிகராக களமிறங்கி இருக்கிறார் அருண் விஜய்.

குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், சாஹோ என்று தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்து நடிப்பில் தனது அந்தஸ்தை மீண்டும் உயர்த்தினார் அருண் விஜய். இந்நிலையில் தற்போது `துருவங்கள் பதினாறு’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அருண் விஜய் அவர்களை வைத்து ‘மாஃபியா’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.

குற்றப் பின்னணியில் த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், வில்லனாக பிரசன்னாவும் நடித்துள்ளார்கள்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of