மகாகவி பாரதியாரின் நினைவுதினம் – நாராயணசாமி பாரதியின் சிலைக்கு மரியாதை

392

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி, முதலமைச்சர் நாராயணசாமி பாரதியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு தினம் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ஆளுநர் மாளிகை அருகில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் கந்தசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதேபோல் தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினர்.

bharathiyar