வெள்ளத்தில் மூழ்கிய தண்டவாளம் – 2,000 பயணிகள் சிக்கிதவிப்பு |

364

கடந்த சில நாட்களாக மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் பெய்த கனமழையால், சியான், மதுங்கா, மாஹிம், அந்தேரி, மலாட் மற்றும் தஹிசார் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மேலும், ரயில் தண்டவாளங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில் மும்பையில் இருந்து பட்லாப்பூர் வழியாக சென்ற மகாலஷ்மி எக்ஸ்பிரஸ், வெள்ளத்தில் சிக்கி இயங்க முடியாமல் நின்றுள்ளது.

ரயிலில் இருந்து 700-க்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். இதனால் அவர்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் இராணுவத்தினர் அங்கு விரைந்துள்ளனர்.